Wednesday, May 23, 2007

புதியதோர் டிவி படைப்போம்(மறு ஒலிபரப்பு)

இது 13 \5\7 ல் எழுதியது
ரத்தத்தின் ரத்தம்; அண்ணே பாத்திங்களா திமுக-காரனுகளுக்கு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி மாதிரி நம்ம டிவியையும், சன் டிவியையும் சமாளிக்கனும்...

வைகோ; இப்போ தெரியுதா டிவி இல்லாமல் கட்சி நடத்தும் கஷ்டம்..?

இதனை கேட்ட கலைஞர் ஆஹா கட்சிக்கு கோஷ்டி மாதிரி டிவியும் முக்கியம்- என நினைக்கையிலேயே ஒரு கோஷ்டி உள்ளே வருகிறது....

ராதிகா; அப்பா நான் அப்பவே சொன்னேனே.. கேட்டீங்களா?
இப்பவும் ஒண்ணும் கெடலை..கனியை கொள்கை பரப்பு செயலாளர் ச்சீ ச்சீ.. தகவல் துறை அமைச்சராக்குங்கள்.. ராடன் டிவிக்கு அனுமதி கொடுங்க....

24மணி நேரத்தில் வரும் அத்தனை மெகா சீரியல்களுக்கு இடையே உங்களின் பொன் மொழிகளை இரண்டு இரண்டு நிமிடமாய் காட்டிக் கொண்டிருப்பபோம்.

கூடவே தினகரன் மீட்பு இயக்கம்-ன்னு ஒன்னைப் போட்டு பச்சைத் தமிழன் சரத் தலைமையில் அமைப்போம்


இராமதாஸ்; நம்ம டிவிக்கு வந்திடுங்க...இந்த நாள் இனிய நாள்-ன்னு நீங்களும், வணக்கம் தமிழகத்துக்கு நானும், தொகுப்புக்கு தொல.திருமா-வையும்.,...போட்டுத் தாக்கலாம்.

வசந்த குமார்; ஐயா நம்மளை இது நாள வரை போட்டு அமுக்கி வச்சிருந்தாங்கே... இப்போ ஒளிமயமான டிவிக்கு வசந்த் அன் கோ மாதிரி... நீங்க தான் ஆதரவு அளிக்கனும்..

பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்க.. இல்ல இல்ல தமிழ் தலைவா அன்று 16 வயதினிலே-ஐ ப்போல புத்தம் புதிய தொலைக்காட்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்த ராமர் பாலத்துக்கு அணிலைப்போல உதவ ஓடோடி வந்தேன்....

பக்கத்திலிருக்கும் டி.ஆர்.பாலு தலைவா சந்தேகமே இல்லை (ராமர் பாலத்தை இழுத்தால்) இவன் அவன் தான்

பாரதி ராஜா; நான் அவன் இல்லை என்று கதற கதற அழகிரி ஆட்களால் இழுத்துச் செல்லப்படுகிறார்...

உஸ் அப்பா இப்பவே கண்ணைக கட்டுதே-- கலைஞர் கண்ணை சற்றே மூட..

ஏய் சன்னு
உன் வாயில மண்ணு.. என்றவாறே விஜய ராஜேந்தர் பிரவேசிக்க.....

அழகிரி குறுக்கிட்டு எந்த சன்? என்க...

நிமிடத்தில் அடுக்கு மொழி பறக்க...சாதா மொழியில்...

தலைவா அந்த எம்.ஜி.ஆரையே எதிர்த்தவன்...இந்த சன்னை எதிர்க்க என்னை களமிறக்குங்கள்.. துண்டைக் காணோம் துணியக் காணோம்-ன்னு ஓட வைக்கிறேன்...

அழகிரி கோஷ்டி குசு குசுப்பாய் அழகிரியிடம் தலைவா இவன் தமிழகத்தையே அப்பிடி ஓட வச்சிருவான் அதனால... என்பதுக்கு முன்னமே அழகிரியின் கண்ணசைய....அழகிரி;(ஸ்டாலினைப் பார்த்து)
இவனுகளை எல்லாம் வளர்த்து வுடுவதுக்கு பதில் நாமே ஒரு டிவியை ஆரம்பிப்போம். வழக்கம் போல வடக்கு உனக்கும் உன் பையனுக்கும், தெற்கு எனக்கும் என் பையனுக்கும்.


கலைஞர்; அருமை அருமை.. அனைத்து இலவச கலர் டிவிகளுக்கும் இலவச கேபிள் தம்பி விஜயகாந்த் கோரிக்கையை ஏற்று என்று அறிவிப்பை பத்திரிக்கைக்கு கொடுத்திடுங்க.