Sunday, June 10, 2007

முதலாளியின் முதலைக் கண்ணீர்மறைந்த எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நன்றி தினமலர்

வி.ஏ.ஒ

தமிழகத்தில் வி.ஏ.ஒ பணிக்கு தேர்வு துவங்கியது.

வாழ்த்துக்கள் ஊழல் பணிக்கு கூட தேர்வு எழுதனுமா?

இங்கிருந்தே பணம் கொடுத்து பாஸ் ஆகி வந்து ஏழை எங்களை ஊருக்குள்ளும் வாழ விடாமல் விரட்டுபவர்களுக்கு தேர்வா?.

இன்னிக்கு தேதிக்கு 100ரூபாய்க்கு குறைந்து வாங்குவது கிடையாது.எவனாவது பணம் வாங்காமல் கையெழுத்து போட்டதாக சரித்திரம் உண்டா?


இதுக்கு எம்.ஏ படிச்சவனும் தேர்வெழுதுகிறார்களாம்?


படிச்சீங்கன்னா போய் தனியா சொந்தமாக உழைச்சு சம்பாதிக்க.அல்லது தகுதி நிர்ணயம் உங்களுக்குள்ளேயே கிடையாதா? ஜாதி வித்தியாசம் பார்க்கத் தெரிந்த உனக்கு வேலை வித்தியாசம் தெரியவில்லையா?


உழைக்க தெம்பில்லாத வீணாப் போன, சமுதாயத்தைக் கண்டு பயந்து போய் குவார்ட்டர் ஊற்ற எம்.ஏ படிப்பு எதுக்கு? வி.ஏ.ஒ பதவி எதுக்கு?

ஒரு ஐந்தாவது பெயிலானவனுக்குரிய பதவிக்கு போட்டி போட்டு டாஸ்மார்க்கில் தலைகுப்புற கவிழ எம்.ஏ?

இப்போ அடுத்ததாக வி.ஏ.ஒ, பின்பு முனிசிபாலிட்டி துப்புறவு தொழிலுக்கும் போட்டி போட வாருங்கள் எனதருமை படித்த நிர்வாணிகளே..

கேவலமாக இருக்கிறது நம் சமுதாயம். முன்னேறுங்க சாமி முன்னேறுங்க.

Thursday, June 7, 2007

சூப்பரப்பு தலிவா சூப்பரப்பு

ஆப்பசைச்ச குரங்கு

ஜெயலலிதாவின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும், இனிவரும் தேர்தலில் அவர் நிற்க முடியாமல் செய்யவும் நடவடிக்கையாக மனு ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க திமுக யோசிப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.

(கோடநாடு மாளிகை) சொத்துக் கணக்கை 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்த நேரத்தில் ஜெயலலிதா குறிப்பிடவில்லை. அது மறைக்கப்பட்டிருக்கிறது. 'இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஜெயலலிதா தேர்தலில் நிற்கவும் முடியாது; ஏற்கெனவே வென்றிருப்பதும் செல்லாது'

ஜெ-வுக்கு சனி கூடவே சுத்திக் கொண்டு இருப்பதை உண்ணிக்கிருஷ்ணன் ஜோசியரால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை...

டான்சி நிலத்திலும் இதே தவறான அணுகுமுறை. கூட இருக்கிறவங்களுக்குத் தான் ஒண்ணும் தெரியாது என்றால் அகிலத்தையே ஆட்டுவிக்கும் அம்மாவுக்கு இது கூடவா தெரியாது????

அவருக்கு அறிக்கை எழுதிக் கொடுத்தவர்களுக்கு வித விதமாக கேள்விகள் எழுத தெரிந்தவர்களுக்கு தங்குவதுக்கு வந்த இடமா இது என்று கூட தெரியாதா?

குறைந்த பட்சம் ஒரு அரசியல் உதவியாளரையாவது மாற்றாமல் வைத்திருந்தால் கன்டினியூட்டி மாறாது என்பது நடிகைக்கு சொல்ல வேண்டியது இல்லை.

கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டதோ????

Tuesday, June 5, 2007

அப்பிடிப் போடு போடு....திருப்பிப் போடு போடு

அதிமுக தலைமைக் கழகம் தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களையும், விளக்கத்தையும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள கண்காணிப்புக் குழுவிடம் தரலாம்.

அந்தக் குழுதான் இறுதி முடிவினை எடுக்கும். இதில் அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ, ஜெயலலிதாவின் அறிக்கை வரும் வரை தெரியாது.


உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸ்தான் அது. இந்த நோட்டீஸ் அனுப்புவது குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், கட்டாயம் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடையாது.

எனவே ஜெயலலிதாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலானதாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி

Monday, June 4, 2007

பாஞ்சாலி சபதம்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா(பாஞ்சாலி) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அம்மா தாங்கள் முதல்வர் பதவியிலிருந்தீர்களா? அல்லது சசிகலாவுடன் டுயட் பாடிக் கொண்டிருந்தீர்களா?இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே?

நீங்க பண்ணியதுக்கு திருப்பிப் பண்ணவில்லை என்பதாலயா?நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்?

இது தான் திமிரின் எல்லை.தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

கோட நாட்டில் நீங்க கட்டி இருக்கும் மாளிகை?????
விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா?


சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி....


ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது.அறிவாலயத்துக்கு நீங் நெருக்கடி கொடுக்கலாம் ஆனால் அவங்க திருப்பித் தரக்கூடாது????? என்ன கொடுமையடா சாமி.....


அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.


வன்முறை கலாசாரம் என்பது ஒரு மனிதர் இன்னொரு மனிதரை வெட்டுவது மாத்திரம் அல்ல.

ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையறாது தொல்லை கொடுப்பதும் வன்முறை கலாசாரம் தான்.

சாத்தான் வேதம் ஒதுகிறது


பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடி என்ன பிரயோஜனம்? நாட்டுக்கும், நாலுபேருக்கும் நல்லது செய்யாதவர்கள் என்றைக்கும் பூமிக்கு பாரம், நாட்டிற்கும் சாபக்கேடு.

நீங்க நாலு பேருக்கு நன்மை செய்தவங்களா???சரித்திரம் சந்தித்த எத்தனையோ கெடுமதியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.

உங்களை மாதிரி தானுங்க????


எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில், கட்சியை கட்டிக் காப்பேன் என அவரது தாய் படத்தின் மீது செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில்

,(மனசுக்குள்ளே அ-சத்தியம் என்று தானுங்க சொன்னீங்க?????)


அ.தி.மு.க., கட்சியை, கட்சி கொடியை காக்கும் கடமை எனக்கு உள்ளது.

உங்களுக்குப் பிறகு இந்தப் பணத்தை யாருங்க அனுபவிப்பாங்க????அதற்காக ஒரு சபதத்தை இன்றைக்கு எடுக்கிறேன். தி.மு.க.,வை "என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன்' என சபதம் எடுக்கிறேன்.

கிளம்பிட்டாங்க அய்யா கிளம்பிட்டாங்கஎத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், அதனை கடந்து அ.தி.மு.க., வின் லட்சக்கணக்கான தொண்டர் கள் துணையோடு,


தமிழக மக்களின் ஆதரவோடு தி.மு.க.,வை கூண்டோடு அழிப் பேன்.


இந்த வீரசபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Sunday, June 3, 2007

ஒரு கனவு

தலைவர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளில் இப்படி நடந்தால்...

அதிமுக தலைவி அம்மா ஜெ விட்ட அறிக்கை.
தானைத் தலைவர், பெரியாரின் வழித்தோன்றல், எனது தலைவருக்கும் தலைவரான அண்ணன் கலைஞர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
அவரது ஆட்சிக்கு நாங்கள் பக்க பலமாய் இருப்போம் என்று இந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

கேரளாவில் பரவும் சிக்கன் குன்யாவிற்கு திமுக காரணமில்லை என்பதை கழகத்தின் தொண்டர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்


மதிமுக- வைகோ
அண்ணன் கலைஞரை இன்று நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது. வெட்ட வெட்ட தளிர்க்கும் தேயிலை பருகுவோர் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுப்பதைப் போல
கட்சியை வெட்ட வெட்ட அவர் தளிர்க்கிறார்.
வாழ்க கலைஞர்.

அடுத்த ஆண்டு ஆட்சி மாற்றம் இருக்கும் என்பதனை இந்த நேரத்தில் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். (நல்ல ஜோசியருங்க)

துக்ளக் சோ
அவர் பல்லாண்டு வாழ மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.நடராஜன்
அவரது கையால் குட்டுப் பட்டவன் இன்று இந்த நிலைக்கு இருக்க அவர் தான் காரணம். வாழ்க அவர் பல்லாண்டு.கலாநிதி மாறன்
எங்கள் குலதெய்வத்துக்கு இன்று பிறந்த நாள்.அவரின் ஆசி வேண்டி நிற்கிறோம். இவண்- தயாநிதி மாறன்,செல்வி, முரசொலி செல்வம்,கலாநிதி மாறன், சன் குரூப், தினகரன் குரூப்...

பேக்ரவுண்டில் ஐயோ கொல்றாங்களே!!! ஐயோ கொல்றாங்களே!!!

Saturday, June 2, 2007

கலாநிதி மாறன் மன்னிப்பு கேட்பாரா?

இது வரை நடந்த பிரச்சனைகளுக்கு கலாநிதி மாறன் தான் காரணம் என்பதில் பிறந்த குழந்தைக்குக் கூட சந்தேகமிருக்காது.

ஒரு ஈகோ பிரச்சனை இத்தனைக்கும் காரணமாகின்றது., என்றாலும் தினகரன் ஆசிரியர் குழுக்களுக்கு புத்தி கிடையவே கிடையாதா?

இப்பத்தான் ஒரு கருத்துக்கணிப்பை விட்டு குடும்பத்தில் குழப்பமாக்கினாங்க, அடுத்து ஒன்றாக வேகமாக முடிவெடுப்பது யார் என்று.

சாமி தினகரன் ஆசிரியர் குழுக்களா உங்களுக்கும் கலாநிதி மாறன் கூட எதாவது மறைமுக பிரச்சனை (நம்ம தமிழ் படத்தில் வருவது போல கூட இருந்தே குழி பறிக்கிற...) இருக்கிறதா?

இல்ல ஜெ-வின் ஆட்கள் தான் தினகரன் ஆசிரியர் குழுக்களில் இடம் பெற்று வேலையைக் காண்பிக்கிறார்களா????

எதுவாய் இருந்தாலும் அப்பா கலாநிதி மாறா கொஞ்சம் அடக்கி வாசிப்பா...

பாவம் உங்கப்பா கலைஞருக்காய் உயிரையே கொடுத்தவர், இப்ப அதுக்கு பழி வாங்க கிளம்பிட்டீங்களா?

பணம் இன்னைக்கு வரும் நாளைக்குப் போகும்..ஆனால் பாசம்???

பாவம் ஒரு முதியவரைப் போட்டு இந்த அளவுக்கு நோகடிக்காதீங்க........!!!!!!!