Monday, May 28, 2007

அழகிரியின் கலவரம் நன்மையில் முடியுமா?

திமுக தலைமையில் மாற்றம் வரும்.
ஸ்டாலின்

ஸ்டாலினுடைய தலைமையை அன்பழகன் ஏற்க மறுத்து வருகிறார். அதனால் தான் இன்னும் தலைமைக்கு ஸ்டாலினுடைய பெயரை அறிவிக்க தாமதமாகிறது.

முதலாவதாக ஸ்டாலினுக்கு ஆளுமைத் திறமை கிடையாது என்பது கடந்த காலங்களில் நிரூபணமான ஒன்று. அவருடனிருக்கும் கூட்டம் அவரைத் தாண்டியத அறிவு படைத்த கூட்டம். இன்று கலைஞருக்காய் மவுனமாய் ஸ்டாலினை ஆமோதிக்கின்றனர்.

கடந்த ஜெ-சட்ட மன்ற காலங்களில் ஸ்டாலின் நன்றாக செய்திருக்கலாம். ஆனால் அவரால் அது முடியவே இல்லை.

கலைஞர் சட்ட சபை வரலாற்றில் ஒரு அகராதி. அது ஸ்டாலினுக்கு சுத்தமாய், சுட்டுப் போட்டாலும் வராது.

அழகிரி-

கட்சியை வழிநடத்தக் கூடிய திறமை இவருக்கு இருக்கிறது.அனைவரையும் அரவணைத்து, ஜெ,வைகோ-கலாநிதி குரூப்பை சமாளிக்ககூடிய ஆற்றல் இவருக்குத் தானிருக்கிறது.

கனிமொழி
கலைஞர் வாயாலேயே வாரிசு பட்டம் பெற்றவர். இவர் மிகத் தகுதி பெற்றவர். ஆனால் ஜெ- போன்று ஒரு துணிவு இவரிடமில்லாதது ஒரு குறை.


முடிவாக....

கலைஞரும், அன்பழகனும் அமைச்சகப்பணியைத் துறந்து விட்டு, கட்சிப்பணி ஆற்ற வரலாம்.

இப்போதிருந்தே ஸ்டாலினுடைய அரசு நிர்வாகம்- கூட்டணிக்கட்சிகளும் அமைச்சராகலாம்.

அழகிரி அன்பழகனுக்கு அடுத்த பதவியில் உட்கார வைக்கப் படலாம்....

இது திமுக-வின் எதிர்காலத்திற்கு நல்லது.