Tuesday, June 5, 2007

அப்பிடிப் போடு போடு....திருப்பிப் போடு போடு

அதிமுக தலைமைக் கழகம் தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை நீதிமன்ற அவமதிப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களையும், விளக்கத்தையும் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ள கண்காணிப்புக் குழுவிடம் தரலாம்.

அந்தக் குழுதான் இறுதி முடிவினை எடுக்கும். இதில் அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கோ, ஜெயலலிதாவின் அறிக்கை வரும் வரை தெரியாது.


உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு மூலம் அனுப்பப்பட்ட நோட்டீஸ்தான் அது. இந்த நோட்டீஸ் அனுப்புவது குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், கட்டாயம் கண்காணிப்புக் குழுவுக்குக் கிடையாது.

எனவே ஜெயலலிதாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலானதாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி