Monday, April 23, 2007

மருந்து சாப்பிடும் போது கருங்குரங்கை......

எல்லாத் துறைகளையும் போலவே சினிமாவும் ஒரு துறை.
நம்ம கலெக்டர் ஆபிசிலிருக்கும் பியூன்கிட்ட, மாடு மேய்க்கும் சின்னானிடம், வறட்டி கோபாலு,..... இது போல ஆயிரெத்தெட்டு தொழில் துறையை சேர்ந்தவர்களிடம் கேட்டால் ஒரு நூறு பேட்டி கிடைக்கும். ஆயிரம் ஆச்சர்யங்கள் இருக்கும்..


அவங்களோட பேட்டியெல்லாம் படிக்க மாட்டீங்களா?


இவனுக தான் உலகத்திலே தொழில் செய்வது மாதிரி அப்படி ஒரு டுபாக்கூர் வுடுவானுக பார்த்துக்கோங்க... அப்ப அப்பா..

டைரக்டர்
ஹீரோ அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஷுட்டிங் வருவது என்னமோ கின்னஸ் சாதனையாட்டம் டைரக்டர் பேட்டி குடுப்பானுங்க...(மனசுக்குள்ள திட்டிக்கிட்டு தான் குடுப்பான். இவனை எல்லாம் இப்படி பாராட்ட வேண்டி இருக்குதுனு)


ஷங்கரை நினைக்காதிங்க..

படம் பார்த்தால் பட்டாம் பூச்சி பறப்பதை போல இருக்கும்(சத்தியமா ஹீரோயினியை நினைத்தாலும் நினைத்திருப்பார்)




ஹீரோ டைரக்டரை பாராட்டி ஒரு பேட்டி உடுவான் பாருங்க....(இரண்டு பேரும் கட்டிபுடிச்சு சண்டை போட்டதை எல்லாம் நினைத்து) அவரோட பெருந்தன்மை யாருக்கும் வராதுன்னு...

சத்தியமா விஜய் பிரபு தேவாவை நினைக்காதீங்க,

தயாரிப்பாளன் இருக்காம் பாருங்க அவனும் காமெடி பண்ணுவான் பாருங்க...

படம் அருமையா வந்திருக்கு.. டைரக்டருக்கு இது ஒரு மைல்கல்(மைல்ட் அட்டாக்கையே வரவச்சதை நினைத்து)
காமெடியில் கலந்து கட்டியிருக்கிறாங்க(தினசரி இரவில் நடந்ததை)