Thursday, April 12, 2007

எத்தனை அடிச்சாலும் தாங்கிக்கிறவனுக தான் தமிழன்

http://sirippu.wordpress.com/tag/%e0%ae%85%e0%ae%b2%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/தமிழை இழிவுபடுத்தும் மலையாளத் திரைப்படங்கள்.
19

02

2007


மலையாளத் திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. யதார்த்தத்தின் பின்னணியில் அல்லது முன்னணியில் தான் அவர்களுடைய திரைப்படங்கள் விரியும்.

மிகைப்படுத்தப் படாத நடிப்பையும், இயல்புடன் கூடிய காதாபாத்திரங்களின் ஒப்பனையும் எப்போதுமே என்னைக் கவர்ந்திருக்கின்றன. ( சமீப காலமாக வருகின்ற திரைப்படங்கள் இந்த கலாச்சார பழக்கத்தை உடைத்திருக்கின்றன என்பது வேறு விஷயம். நான் அதைப் பற்றிச் சொல்ல வரவில்லை.)

மலையாளத் திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படும் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் பற்றிய தார்மீகக் கோபம் எனக்கு எப்போதுமே உண்டு.

வில்லனின் பெயரை ஆண்டணி என்றோ ஜோசப் என்றோ போட்டு இன்பம் காணும் சில இயக்குனர்களைப் போல, மலையாளிகள் வில்லன் என்று வந்து விட்டால் தமிழர்களை அதுவும் அவர்களை இழிவு படுத்தும் பல வசனங்களோடு தான் அரங்கேற்றுகிறார்கள்.

பாண்டி, அறிவில்லாதவன், விவரம் இல்லாதவன் என்னும் முத்திரையோடுதான் தமிழர்கள் அங்கே முன்னிலைப்படுத்தப் படுகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். வில்லன் அல்லது காமெடியன் அல்லாத ஒரு தமிழ் கதாபாத்திரம் அங்கே வெகு அபூர்வம் !

சட்டென்று நினைவுகளிலிருந்து எடுத்தால் பாண்டிப்பட, ராவணப்ரபு போன்ற சூப்பர் டூப்பர் மலையாள ஹிட் படங்கள் எல்லாம் தமிழர்களின் மீது சாணி அடித்து சம்பாதித்துக் கொட்டியவையே.

தமிழகத்தின் சந்து பொந்துகளில் சாயா கடைகள் போட்டிருக்கும் மலையாண சகோதரர்களை அண்ணே என்று அன்போடு அழைத்தே கெளரவிக்கும் தமிழர் கலாச்சாரத்தை மலையாள இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வெறுப்புடனே அணுகுவதன் காரணம் என்னவென்பது புரியாத புதிரே.

ஒருவேளை தமிழ்ப்படங்கள் கேரளாவில் பெறும் மாபெரும் வெற்றிகளைச் சகித்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

அல்லது தாங்கள் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள் தமிழர்கள் இன்னும் கல்வியறிவில் பின் தங்கியவர்கள் தானே என்னும் எள்ளலாக இருக்கலாம்.

அல்லது தமிழர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டும், தமிழகம் முழுவதும் தொழில்களை நடத்திக் கொண்டும் தண்ணீர் கூட தராமல் சுயநலமாய் இருக்கும் அவர்களுடைய இரத்தத்துடன் கலந்த குணமாக இருக்கலாம்.

அல்லது தமிழகத்தைப் போல வளர்ச்சியடைய முடியாத நிலையில் இருக்கின்ற கையாலாகாத தனத்தின் கொப்பளிப்பாக இருக்கலாம்.

எது எப்படியோ முக்கால் வாசி மலையாளத் திரைப்படங்களில் தமிழ் கதாபாத்திரம் ஒன்று வந்து அவமானப் படுகிறது. அதை கேரளா முழுவதும் கை கொட்டிச் சிரிக்கிறது.

நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன் ? சக மனிதனை மதிக்கத் தெரியாத மலையாள படித்த இயக்குனர்களை விட, யாரையும் கபடமின்றி அன்பு செய்யும் எனது தமிழக கிராமத்துத் தோழன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன்.

மலையாள இயக்குனர்களே. மனதளவில் அவன் அளவுக்கு நீங்கள் உயரும் வரை தமிழனை பாண்டி என்றோ, கையாலாகாதவன் என்றோ அறிவில்லாதவன் என்றோ திட்டிக் கொண்டே இருங்கள். தமிழன் மன்னிப்பான்.



Comments : 13 Comments »
Categories : மலையாளம்

நன்றி; உரித்தாக

No comments:

Post a Comment