Thursday, May 17, 2007

நிகழ்வுகள்-4

நிகழ்வு-1
அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் வரலாறு தெரியாமல் அவரது கனவு திட்டத்தை எதிர்க்கின்றனர். (சேது சமுத்திர திட்டத்திற்கு)

விஜயகாந்து சொன்னது போல 'கட்சி ஆரம்பிச்சிருந்தால் கஷ்ட நஷ்டம், கொள்கை,வரலாறு தெரியும்.இவங்க குடி வந்தவங்களுக்கு என்ன தெரியும்?
( ஆஹா.. நம்ம விஜயகாந்து உண்மையிலேயே அதிமுக-விற்குத் தான் இதனைச் சொல்லி இருக்க வேண்டும், என்ன மப்பிலயோ அன்றைக்கு மாறிப் போய்த் தொலைச்சிடுச்சு)



நிகழ்வு-2

பா.ஜ.க பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திர ராஜன் பேட்டி....
திமுக ஆட்சியில் விலைவாசி விஷம் போல ஏறி விட்டது,குண்டுகள் திண்டிவனத்தில் கூட வெடிக்கின்றன. அப்பாவி மீனவர்கள் உயிரிழக்கின்றனர்..அண்டை மாநில பிரச்சனையும் தீரவில்லை, உள் குடும்ப பிரச்சனையும் தீரவில்லை...


குண்டுகள் எங்கே வேண்டுமானாலும் வெடிக்கலாங்க. அதென்னங்க திண்டிவனத்தில் கூட?... அதுக்கு கலைஞர் என்ன பண்ணனும்ங்க?

அண்டை மாநிலப் பிரச்சனையும் தீரவில்லை. ஆஹா கர்நாடகத்திலே இவனுக கூட்டணிக் கட்சிதானுங்க கும்மி அடிக்கிறானுக... ஏன் காவிரி பிரச்சனையை தீர்க்க வேண்டியது தானே?


நிகழ்வு-3

டில்லியில் எம்.பி க்கள் வசிக்கும் பகுதியில் குரங்குத் தொல்லை அதிகரித்து விட்டது. மலைச்சாமி எம்.பி குற்றச்சாட்டு. மத்திய சுற்றுச் சூழல்\வனத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை...

ஆஹா வனத்தில மேய்ச்சாலும் இனத்திலே சேர்-ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...