Monday, May 21, 2007

காவிரியும் 40 (எம்.பி) திருடர்களும்

இந்தியாவை தாயாகவே சித்தரித்து பழக்கப்பட்டவர்கள் நாமெல்லாரும். அதே மாதிரி தான் தமிழகத்தையும்.

இம்போது நம்மை உச்சந்தலையில் ஆந்திராவும், பொடனியிலே கர்நாடகமும்,பின்னாடி கேரளாவும் (இந்தப் பதிப்பை ஆபாசமாக எழுத வேண்டாம் என்று கட்டுப் பட்டு) காலடியிலே வுடுதலைப் புலிகளும்... குத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.....

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நமது ஆசானுக்குத் தெரியம், இது நாள் வரை பாசவலையில் வீழ்ந்த அவர் 83 வயசுலே தான் எழுந்திருக்கவே முடிந்திருக்கிறது.

இப்போ டி.வி இல்லைன்ன உடனே டி.வி ஆரம்பிக்க நினைத்த அவருக்கு, காவிரி இல்லைங்கிறதை யாராவது ஞாபகப்படுத்த வேண்டும்.

40 எம்.பிக்களை கை வச்சிருக்கும் நீங்க அடுத்த வருடம் எலெக்ஷனைப் பார்க்க வேண்டும். அடுத்த தடவை 40ம் கிடைக்கும் என்பது நிச்சயமா?

இது வரை பேரனுக்காக (குடும்பத்துக்காய்) பார்த்தீர்கள், இனியாவது மிரட்டல் அஸ்திரத்தை எடுங்கள்.

இராமதாஸ் கட்சி மாறுவதுக்கு இந்திய அளவில் நீங்க தான் முன்னுதாரணம்.

40 பேரையும் ராஜினாமா பண்ணச்சொல்லுங்கள். காவிரிக்காய்,இட ஒதுக்கீட்டுக்காய் அரசியல் செயதீங்கன்னுட்டு நாளை உங்க பேரும் வரலாற்றில் நிற்கட்டும். எல்லாப் பயலுகளும் சம்பாரிச்சுட்டானுக.... இனியாவது இதுக்கு ஒரு முடிவெடுப்பானுகளா?????????????

No comments:

Post a Comment