Monday, June 4, 2007

பாஞ்சாலி சபதம்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா(பாஞ்சாலி) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அம்மா தாங்கள் முதல்வர் பதவியிலிருந்தீர்களா? அல்லது சசிகலாவுடன் டுயட் பாடிக் கொண்டிருந்தீர்களா?



இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே?

நீங்க பண்ணியதுக்கு திருப்பிப் பண்ணவில்லை என்பதாலயா?



நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்?

இது தான் திமிரின் எல்லை.



தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

கோட நாட்டில் நீங்க கட்டி இருக்கும் மாளிகை?????




விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா?


சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி....






ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது.



அறிவாலயத்துக்கு நீங் நெருக்கடி கொடுக்கலாம் ஆனால் அவங்க திருப்பித் தரக்கூடாது????? என்ன கொடுமையடா சாமி.....


அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.


வன்முறை கலாசாரம் என்பது ஒரு மனிதர் இன்னொரு மனிதரை வெட்டுவது மாத்திரம் அல்ல.

ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையறாது தொல்லை கொடுப்பதும் வன்முறை கலாசாரம் தான்.

சாத்தான் வேதம் ஒதுகிறது


பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடி என்ன பிரயோஜனம்? நாட்டுக்கும், நாலுபேருக்கும் நல்லது செய்யாதவர்கள் என்றைக்கும் பூமிக்கு பாரம், நாட்டிற்கும் சாபக்கேடு.

நீங்க நாலு பேருக்கு நன்மை செய்தவங்களா???



சரித்திரம் சந்தித்த எத்தனையோ கெடுமதியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.

உங்களை மாதிரி தானுங்க????


எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில், கட்சியை கட்டிக் காப்பேன் என அவரது தாய் படத்தின் மீது செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில்

,(மனசுக்குள்ளே அ-சத்தியம் என்று தானுங்க சொன்னீங்க?????)


அ.தி.மு.க., கட்சியை, கட்சி கொடியை காக்கும் கடமை எனக்கு உள்ளது.

உங்களுக்குப் பிறகு இந்தப் பணத்தை யாருங்க அனுபவிப்பாங்க????



அதற்காக ஒரு சபதத்தை இன்றைக்கு எடுக்கிறேன். தி.மு.க.,வை "என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன்' என சபதம் எடுக்கிறேன்.

கிளம்பிட்டாங்க அய்யா கிளம்பிட்டாங்க



எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், அதனை கடந்து அ.தி.மு.க., வின் லட்சக்கணக்கான தொண்டர் கள் துணையோடு,


தமிழக மக்களின் ஆதரவோடு தி.மு.க.,வை கூண்டோடு அழிப் பேன்.


இந்த வீரசபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.