Sunday, April 29, 2007

மனித நேயமற்றவர்களுடன் அரசியல் நடத்த வேண்டியள்ளதே!!!!!!கலைஞரின் ஆதங்கம்.

நேற்றுத் தான் மனித நேயம் பற்றி சிலாகித்திருந்தேன், அதே வேளையில் சட்ட சபையில் கலைஞர் இவ்வாறு ஆதங்கப்பட்டுள்ளார்.

உண்மையில் இது ஒரு வெட்கப்படக் கூடிய, வேதனைக்க கூடிய ஒரு நிகழ்ச்சி.

ஒரு மூத்த தலைவரின் அரசியல் அனுபவம் நமக்கு ஒரு பாடம்.
இதனை நடத்த விடாமல் தடுக்க நினைக்கும் இவர்களின் மனச்சாட்சி இதனை மன்னிக்குமா?

கடந்த 23ம் தேதி உ.பி- தேர்தல் கூட்டத்தில் அம்மையார், கத்துக்குட்டி ராகுல் காந்தியை 'பண்பாடு தெரியாமல் வெளி நாட்டு கலாசாரத்தில் வளர்ந்ததால் தான் மறைந்த பிரதமர் நரசிம்மராவை தாக்கி பேசினார்'என்று கூவி விட்டு வந்தவரை என்னவென்று கூறுவது?

இவர் எந்த நாட்டு பண்பாட்டில் வந்தவர்? மறைந்த முரசொலி மாறனின் இறுதிச்சடங்கின் போது அம்மையாரும், அவரின் கட்சியினரும் கொண்டாடியது தான் தமிழர் கலாச்சாரமா? அல்லது? கர்நாடகத்தினரின் பண்பாடா?

ஆயிரெத்தெட்டு பிரச்சனைகள் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியவர் கலைஞர்..

கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு தலைவரையுமே, அவர் பாராட்டி மரியாதை செலுத்தியுள்ளாரே அன்றி, இந்த அம்மையாரைப்போல இகழத்தக்க அளவில் நடத்தவில்லை.

அவரின் பண்புகள் அனைத்தும் ஒரு அரசனுக்குரியவை. ஒவ்வொரு நிமிடமும் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம்.


டாக்டர் கலாமை வரவிடாமல் செய்தார்., இழப்பு கலைஞருக்கு இல்லை.... கலாமுக்குத்தான்.
ஒரு சாய் பாபாவிடமும், சங்கராச்சாரியாரிடமும் காலடியில் அமர அனுமதிக்கும் ஜனாதிபதி பதவி ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு பாராட்டு விழாவிற்கு பதவி அனுமதிக்கவில்லை.

வாழ்க தமிழரின் பண்பாடு......

1 comment:

  1. சார்,
    நான் ஜெ க்கு சப்போர்ட் செய்யவில்லை.. இருந்தாலும் உங்கள் கட்டுரையின் சில வரிகள் சிரிப்பை வரவழைத்துவிட்டன...

    //ஒரு மூத்த தலைவரின் அரசியல் அனுபவம் நமக்கு ஒரு பாடம்.
    இதனை நடத்த விடாமல் தடுக்க நினைக்கும் இவர்களின் மனச்சாட்சி இதனை மன்னிக்குமா?//

    அவரோட அரசியல் அனுபவம் நமக்கு வேண்டாம் சார்.. அது ஒன்னும் சுத்தமானதல்ல.. பல அசிங்கங்கள் நிறைந்ததுதான்...


    //கலைஞரின் வரலாற்றில் எந்த ஒரு தலைவரையுமே, அவர் பாராட்டி மரியாதை செலுத்தியுள்ளாரே அன்றி, இந்த அம்மையாரைப்போல இகழத்தக்க அளவில் நடத்தவில்லை. //

    இதுதான் சார் செம காமெடி... அவர் இகழாத, திட்டாத தலைவர்களே இல்லை... என்னமோ போங்க...


    //அவரின் பண்புகள் அனைத்தும் ஒரு அரசனுக்குரியவை. ஒவ்வொரு நிமிடமும் நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம்.//


    அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருந்தாலும், அவரிடமிருக்கும் பல கெட்ட விஷயங்களையும் எடுத்துக் கொள்ள கூடாது..

    //டாக்டர் கலாமை வரவிடாமல் செய்தார்., இழப்பு கலைஞருக்கு இல்லை.... கலாமுக்குத்தான்.//

    இதுதான் ஹைலைட் காமெடி

    நான் என்ன சொல்றனா, அரசியல் நாகரீகம், மனிதநேயம் இதல்லாம் ஜெ விடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.. அதற்கு மேல், அது எல்லாம் தனக்கு இருப்பது போல எண்ணிக்கொண்டு அது ஜெ விடம் இல்லையே என்று சட்டமன்றத்தில் முதலைக் கண்ணீர் விடுவது தமிழனை ஏமாற்றும் மற்றுமொறு முயற்சி அவ்வளவுதான்..

    //வாழ்க தமிழரின் பண்பாடு......//
    சார் நான் பல இடத்துல கேட்ட கேள்வி ஆனா விடைதான் இன்னும் கிடைக்கல... அது என்ன் தமிழ், தமிழர் பண்பாடு எல்லாம், மு.க வுக்கும் அவர் குடும்பத்துக்கும் மட்டுமான சொத்தா??? ஆனா ஊனா மு.க வுக்கு ஏதாவது ஆனா மட்டும், தமிழ், தமிழர்ன்னு வந்துடுறீங்க...

    தமிழ்நாட்டுல மிச்சம் 7 கோடி பேர் இருக்காங்கோ.. அதுல பாதிபேர்க்கும் மேல மு.க வுக்கு வோட்டு போடற்தில்ல....

    ReplyDelete